Feb 27, 2011

எக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes


எக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த மதிப்பெண் எந்த பாடத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. திரும்பவும் அந்த நெடுவரிசையில் மவுசை வைத்து மேலெ சென்று அதன் தலைப்பைப் பார்த்து விட்டு வருவோம்.

இந்த மாதிரி அடிக்கடி மேலெயும் கீழேயும் பார்த்துக்கொண்டிருந்தால் எரிச்சல் தான் வரும். எந்த வரிசைக்கு நகர்த்திச் சென்றாலும் தலைப்புகள் மட்டும் மேல்நோக்கிப் போகாமல் கூடவே வந்தால் நலமாய் இருக்கும் என்று நினைப்பீர்கள். இதற்கு உள்ள ஒரு வசதி தான் Excel Freeze Panes ஆகும்.

1. வரிசைகள் மட்டும் நகராமல் செய்தல் ( Rows only do not move when scrolling down in Excel)

முதலில் சில வரிசைகள் மட்டும் நகராமல் இருக்க எப்படிச்செய்வது என்று பார்ப்போம். தலைப்புகள் உள்ள வரிசைக்கு அடுத்துள்ள வரிசையின் முதல் செல்லில் மவுசால் கிளிக் செய்து கொள்ளவும். சிலருக்கு முதல் வரிசையில் கம்பெனி பெயர் வரும். அடுத்த வரிசையில் தான் தலைப்புகள் வரும். அப்படியெனில் மூன்றாவது வரிசையின் முதல் செல்லில் கிளிக் செய்துவிட்டு Window-> Freeze panes என்பதை தேர்வு செய்தால் போதும். அந்த வரிசையின் அடியில் ஒரு நேர்கோடு வந்திருக்கும்.


இனி நீங்கள் வரிசையாக தகவல்களை கீழே நகர்த்திக் கொண்டு வந்தாலும் முதல் வரிசையில் உள்ள தலைப்புகள் மட்டும் மேல்நொக்கி சென்றுவிடாமல் வந்து கொண்டேயிருக்கும்.

2. வரிசைகள் மற்றும் சில நெடுவரிசைகள் நகராமல் செய்தல் (Rows and Columns do not move when scrolling left to right in Excel)

மேலே உள்ளதில் மேலிருந்து கீழ்நோக்கி நகர்த்தும் போது தலைப்புகள் நகராமல் இருக்குமாறு செய்தோம். இதில் இடமிருந்து வலமாக நகர்த்தும் போது சில நெடுவரிசைகள் மட்டும் நகராமல் வந்து கொண்டே இருக்க எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

முதல் நெடுவரிசையில் அதாவது A1 இல் ஒரு மாணவனது பெயரும் இரண்டாவதில் வகுப்பும் மூன்றாவதிலிருந்து மதிப்பெண்கள் ஆரம்பிக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது கீழ்நோக்கிச் சென்றால் தலைப்புகள் தெரியும். ஆனால் இடமிருந்து வலமாகச் செல்லும் போது மாணவனின் பெயர், வகுப்பு, மதிப்பெண்கள் என்று வரிசையாக வரும். குறிப்பிட்ட மதிப்பெண் எந்த மாணவனுடையது என்று தெரியாமல் போய்விடும்.

முதல் இரண்டு நெடுவரிசைகள் மட்டும் நகராமல் இருக்க வேண்டுமெனின் மூன்றாவது நெடுவரிசையில் வைத்து Freeze Panes கொடுக்க வேண்டும். அதாவது எந்த நெடுவரிசை வரை வேண்டுமோ அதற்கு அடுத்த செல்லில் வைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் தலைப்பும் சில நெடுவரிசைகளும் நகராமல் இருக்க வேண்டுமெனின் தலைப்பு முடிந்து தகவல்கள் ஆரம்பிக்கும் வரிசையில் குறிப்பிட்ட நெடுவரிசைக்கு அடுத்த செல்லில் வைத்து Freeze panes கொடுக்க வேண்டும். இதனைக் காண்பிக்க குறுக்கும் நெடுக்குமாய் அடிக்கோடுகள் செல்லும். கீழுள்ள படத்தில் இடமிருந்து வலமாக Total வரை நகர்த்தியபோதும் பெயரும் வகுப்பும் காட்டப்படுகின்றன.


எதுவே வேண்டாம் என்றால் திரும்பவும் Window மெனுவில் சென்று UnFreeze Panes கொடுத்து விடுங்கள்.

5 comments:

  1. உங்கள் எக்சல் பாடக்குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.Excel,Access இணைப் பயன்படுத்தி ஒரு data base எப்படி முகாமை செய்வது எனவும் ஒரு பதிவைப் போட முடியுமானால் தயவுசெய்து போடவும்.

    நான் இலங்கையிலிருந்து நௌசாத்.....

    ReplyDelete
  2. நெட்டு வரிசை மற்றும் குறுக்கு வரிசை இரண்டையும் ஒரு சேர FREEZE பண்ண வழி உண்டா?

    ReplyDelete
  3. நேரம் கிடைக்கும்போது http://www.unavuulagam.blogspot.com/
    பக்கம் வந்து பாருங்கள்.

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு தோழி, இந்த பயன்பாடு அறிந்ததே, மற்றவர்களுக்கு உதவும்.

    ReplyDelete
  5. unkalutaiya pathivukal ellam rempa arumai

    ReplyDelete